பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 23 விசிறி! விசிறி அழகு விசிறி! விதவித மான விசிறி! அசதி களப்பைப் போக்கி ஆனந்தம் கொடுக்கும் விசிறி! மேலே சுழலும் விசிறி மின்சாரம் இயக்கும் விசிறி! வாலு நாலு கொண்டே வட்டமாய்ச் சுழலும் விசிறி! மட்டை ஓலை விசிறி! மடக்கிச் சுருட்டும் விசிறி! அட்டை யாலே விசிறி! ஆகா எத்தனை விசிறி! விளக்கு வைத்த விசிறி! மேசை ஏறும் விசிறி! தளுக்குப் பெண்ணின் கையிலே டால டிக்கும் விசிறி! காற்று கொடுக்கும் விசிறி! குளிர்ச்சி கொடுக்கும் விசிறி! நேற்றும் இன்றும் நாளையும் நிலைத்து நிற்கும் விசிறி •+ -i- of