பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 125 விந்தை விளக்கு! அந்தி வந்தே இருட்டிடினும் அஞ்சிடேன், நான்தான் அஞ்சிடேனே! விந்தை செய்யும் விளக்கொன்றே வெளிச்சம் தந்திடும் என்றனுக்கே! பகலில் அந்த விளக்கதனை பார்த்தால் எதுவும் தெரியாது! மிகவே முயன்றே ஏற்றிடினும் வீண்தான் அதுவோ, எரியாது. தானே இரவில் அவ்விளக்கு சாந்தமாய் மெளனமாய் எரிந்திடுமே! நானே சொல்லவா, அவ்விளக்கை? நல்லது மின்மினிப் பூச்சியேதான்! + 4 +