பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 141 வண்டி! தாரு ரோடு மேலே போகும் காரு வண்டி இல்லே! - இது காரு வண்டி இல்லே! சிமிண்ட் ரோடு மேலே போகும் சீமை வண்டி இல்லே! - இது சீமை வண்டி இல்லே! காட்டு விறகு ஏத்திப் போகும் கட்டை வண்டி இல்லே! - இது கட்டை வண்டி இல்லே! மாப்பிள்ளை பொண்ணு ஏத்திப் போகும் மாட்டு வண்டி இல்லே! - இது மாட்டு வண்டி இல்லே! தந்த வண்டி, தங்க வண்டி சாலை வண்டி இல்லே! - இது சாலை வண்டி இல்லே சொந்த வண்டி சோக்கு வண்டி துள்ளி வருகுது பாரு! - கொஞ்சம் தள்ளி நின்னு பாரு! டபடபா! டபடபா!! டபடபா! டபடபா!!! •+ -ī- -ī