இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சின்னப் பூவே மெல்லப்பாடு 149 அழகு நமக்குக் கல்விதான்! உயர உயர மேடுதான்! உண்மை என்றும் உண்மைதான் அயரத் தயங்க வேண்டுமோ? - வீணே அஞ்சி வாழ வேண்டுமோ? அஞ்சா உணர்வே வெற்றிதான்! அறிவும் வலிவும் கவசம்தான்! நெஞ்சம் என்பது ஒன்றுதான் - அதில் நினைவுத் தெளிவு நன்றுதான்! அழகு நமக்குக் கல்வி தான்! அன்பு நமக்குச் செல்வம்தான்! பழகும் தமிழே பாட்டுதான்! - அதற்குப் பாரில் இல்லை ஈடுதான்! •+ -ī- - -