பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 153 ஆதவன்! ஆதவன் என்பவன் பாட்டாளி - அவன் அனைத்தாம் உயிர்க்கும் கூட்டாளி: பூதலம் வானம் அண்டமெலாம் - அவன் பொழியும் ஒளியில் உயிர்வாழும்! ஆதவன் என்பவன் பொறியாளன் - அவனே அண்டம் இயக்கும் நெறியாளன்! மாதம், வருடம், பருவமெலாம் - அவன் வகுத்த படிதான் உருவாகும்! ஆதவன் என்பவன் மெய்விளக்கு! அவனே ஆண்டவன் ஏந்தும் கைவிளக்கு! சோதியே, அறிவே அவன் வடிவம் - அவனைத் தொழுது வணங்குதல் நம்கடமை! + + +