பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குாய்ப்பாலோடு கொஞ்சம் தமிழ்ப்பால். காலத்தின் ரசவாதம் சில நேரங்களில் ஆச்சர்யமாக இருக்கிறது. சில நேரங்களில் அதிசயமாக இருக்கிறது. பல நேரங்களில் 'இது எப்படி சாத்தியம்? 6了6霄 வினாவெழுப்புகிறது. ஆம்! வாழ்க்கை என்றால் இப்படித்தான்.... உலக நியதி இதுதான் என்று அதுவே விடையும் தருகிறது. - சிறுவயதில் கொக்கு, அணில், கோகுலம், அம்புலிமாமா இதழ்களெல்லாம் திகட்டாத விருந்தாக இருக்கும். என் தந்தையார் கவிஞர் வயலூர் சண்முகம் எழுதி, அக்கால கட்டத்தில் என்னைக் கவர்ந்தவையாக இருந்தன அவரது குழந்தைப்பாடல்கள். இன்று என் மகள் நேசிகாவும் தன் தாத்தாவின் பாடல்களைப் படித்து ரசிக்கிறாள். ஒரு படைப்பு என்பது காலங்களைக் கடந்து வாழும் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்? எழுதப்பட்டு முப்பது வருடங்கள் கடந்து நூல்வடிவம் பெறும் இந்த குழந்தைப் பாடல்கள் இன்றளவும் எளிமையாகவும், இயல்பாகவும், நீதிசொல்லும் விதமாகவும், இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கின்றன. இது எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் எனது தந்தையார் கவிஞர் வயலூர் சண்முகத்தின் பள்ளித் தோழரான, இன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், அன்று என் தந்தையாரைக் காரைக்கால் வீட்டில்