பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 165 இதயம் என்பதும்...! இதயம் என்பதும் திரையானால் - 'எண்ணம் என்பதே வரைபடமாம்! எண்ணம் என்னும் வரைபடத்தில் எழுதுக சத்திய உருவொன்றே! இதயம் என்பதும் பொழிலானால் - 'எண்ணம் என்பதும் மலராகும்! எண்ணம் என்னும் மலரினிலே என்றும் கமழ்க அன்புமணம்! இதயம் என்பதும் யாழானால் - 'எண்ணம் என்பதே பண்ணாகும்! எண்ணம் என்னும் பண்ணதிலே இறைவன் அருளே சுதியாகும்! இதயம் என்பதும் விண்ணானால் - 'எண்ணம் என்பதே எழுகதிராம்! எண்ணம் என்னும் எழுகதிரில் என்றும் சுடர்க அன்பொளியே! -i- to “f*