பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வயலூர் சண்முகம் பேனா! பேனா அழகுப் பேனாவாம்! பிரியம் மிக்கப் பேனாவாம்! தேனாம் தமிழில் எழுதவே தினமும் உதவும் பேனாவாம்! முள்போல் எழுதும் பேனாவாம்! மொத்தியாய் எழுதும் பேனாவாம்! கல்போல் கனத்த பேனாவாம்! காகிதக் கலப்பையே பேனாவாம்! பச்சை நிறத்துப் பேனாவாம்! பாங்கு மிகுந்த பேனாவாம்! அச்சுபோல கையெழுத்தை ஆக்கி வைக்கும் பேனாவாம்! •+ + -ī