பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 183 ஆடுவோம் ! இன்னல் வரினும் புன்னகை உதிர்ப்போம்! இறப்பே வரினும் அறப்பகை எதிர்ப்போம்! கன்னல் அனைய இன்மொழி உரைப்போம்! கடமை ஒன்றிலே பொழுதெலாம் கரைப்போம்!, உண்மை, அன்பு, வண்மை நாடுவோம்! ஒழுக்கம் என்னும் விழுப்பம் தேடுவோம்! திண்மை கொண்ட நன்மை போற்றுவோம்! தீமை செய்யும் புன்மை தூற்றுவோம்! நாடொறும் உடலின் நலத்தைப் பேணுவோம்! நற்கலை பயின்று சற்குணம் பூணுவோம்! பீடுறும் தெண்டால் கேடுகள் களைவோம்! பிறவியின் பயனே அறமெனத் தெளிவோம்!