பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 187 நல்ல பொம்மை ! பொம்மை நல்ல பொம்மை! - கிழப் பொக்கைச் சிரிப்புப் பொம்மை! அம்மை தந்த பொம்மை - பாரத அம்மை தந்த பொம்மை! நம்மை எல்லாம் மீட்டு - இந்த நாட்டின் அடிமை ஒட்டி, செம்மை செய்த பொம்மை - புவிக்கே தெய்வம் போன்ற பொம்மை! கண்ணன் தந்த கீதை - புத்தர் அண்ணல் தந்த போதம் கண்ணைப் போன்ற குறள்கள் - மனிதக் கருவாய்ப் பிறந்த பொம்மை! ஏசு சொன்ன மொழிகள் - அன்பு ஏந்தல் நபியின் வரிகள் மாசு போக ஓதி - உண்மை வணங்கி நின்ற பொம்மை!