பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 193 கார்த்திகை நல்ல கார்த்திகையாம் ! மங்கல விளக்குகள் ஏற்றி வைப்போம்! - அழகு மணிவி ளக்குகள் ஏற்றி வைப்போம்! வெண்கல விளக்குகள் ஏற்றி வைப்போம்! - பெரும் வீதிவி ளக்குகள் ஏற்றி வைப்போம்! . குத்து விளக்குகள் ஏற்றி வைப்போம்! - தொங்கும் குலைவி ளக்குகள் ஏற்றி வைப்போம்! சித்திர விளக்குகள் ஏற்றி வைப்போம்! - அகல் சின்ன விளக்குகள் ஏற்றி வைப்போம்! கூடம் முழுதும் ஏற்றி வைப்போம்! - தெருக் குப்பை மேட்டிலும் ஏற்றி வைப்போம்! மாடம் எங்கும் ஏற்றி வைப்போம்! - கொல்லை மாட்டுக் கொட்டிலிலும் ஏற்றி வைப்போம்!