பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 195 வேப்பமரம்! புதிய வருடப் பிறப்பன்று புசிக்கும் வேப்பம் பூரசத்தால் எதிலும் கசப்பும் இடையுண்டாம் என்பதை நாமும் உணர்கின்றோம். உலகே கருகும் வெயிலிலும் உடலும் உள்ளமும் குளிரடைய இலகும் பச்சைப் பந்தலிட்டே இன்ப நிழலைத் தரும் வேம்பே' பூவும் காயும் கசந்திடினும், பொன்னாம் கொழுந்தும் கசந்திடினும், நோவும் நச்சும் தீர்க்கின்ற நுட்ப மருந்தும் வேம்பன்றோ? காப்பாய் வீடு மனை செழிக்கக் கண்படு திருஷ்டிதனைக் கழிக்க வேப்பிலைக் கொத்தின் பிடியன்றோ விளங்கும் மந்திர சூட்சுமமாய்!