பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 199 அன்னையைப் போற்றிடுவோம் ! அன்னையைப் போற்றிடுவோம்! - முத்தமிழ் அரசியைப் போற்றிடுவோம்! இன்னுயிர் தன்னிலும் உன்னதம் பெற்றே இப்புவி மொழிகளில் ஒப்புயர் வற்ற (அன்னை) தொன்மையால் புகழ் தோய்ந்து - தனித் தூய்மையாம் நலம் வாய்ந்து, நன்மறைக் குறளாய் பொன்னணி பூண்டு நாலடி போல்பல நூலெழில் கொண்ட (அன்னை) கொம்புதரும் தனித்தேனாய் - சுவை கூடிவரும் கனிச் சாறாய், கம்பனும், இளங்கோ நம்பியும் செய்த காவிய வளங்கள் யாவும் எய்திய (அன்னை) ஒதும் சாதி இரண்டெனவே - இயற்கை உயர் அறத்தால் பிரித்துரைத்த நீதி ஒளவையின் போதம் மிளிரும் நித்திய இளமையின் சத்திய ஒளிசேர் - (அன்னை)