பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவைப் போல நல்ல தெல்லாம் கூறி நம்மை உயர்த்திட அருமை நண்பன் போல் நமக்கு அருகில் இருந்து உதவிட புத்தகம் இதோ புத்தகம் இதோ நித்தம் நித்தம் உதவுகின்ற புத்தகம் இதோ! மெத்தப் பெரிய கவிஞ ரோடும் வேண்டும் போது பேசிட சித்தம் மகிழச் செய்யும் நல்ல சித்தி ரங்கள் பார்த்திட புத்தகம் இதோ புத்தகம் இதோ நித்தம் நித்தம் உதவுகின்ற புத்தகம் இதோ: இரவும் பகலும் எந்த நாளும் ஏற்ற கல்வி கற்றிட உரிய முறையில் அறிவு பெற்றே உயர்ந்து நாமும் சிறந்திட புத்தகம் இதோ புத்தகம் இதோ நித்தம் நித்தம் உதவுகின்ற புத்தகம் இதோ! 94