பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்யாப் பூவே! கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே, தரையில் கிடப்பதேன்? குருவி, காகம் கிளையில் அமர்ந்து கொத்திப் போட்டதோ?-இல்லை, பெரிய காற்று விரைந்து வந்து பிய்த்துப் போட்டதோ? கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே, தரையில் கிடப்பதேன்? குறும்புப் பையன் எறிந்த கல்லால் பிரிய நேர்ந்ததோ?-இல்லை, கொறிக்கும் அணில்தான் உன்னைக் கீழே பறித்துப் போட்டதோ? 97