பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னியாகுமரி வரையுள்ள ஒவ்வொருவரும் உடன் பிறந்தவர் என்ற உணர்வு வேண்டும். நாட்டுக்காக உழைத்த நல்லவர்கள் என்றும் நெஞ்சில் நிலை பெற்றிருக்க வேண்டும். சாந்த மூர்த்தியும் சத்திய வடிவுமான காந்தி வழியே நாம் வாழும் வழி என்ற செய்திகளைக் கூறி இளம் உள்ளங்களில் நாட்டுப் பற்றைக் கவிஞர் ஊட்டுகிறார். இந்த எண்ணம் இணையப் பெற்ற குழந்தைகள், இன்று நேரு வாழ்வது எங்கள் பிஞ்சு நெஞ்சிலே. எனப் பாடிக் களிப்பதைப் பார்த்துப் பரவசம் கொள்கிறார். அது அந்தக் காலம், இது இந்தக் காலம்’ என நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் பாணியில் உள்ள ஒரு பாடலில், நாடு அன்றிருந்ததைவிட இன்று பலவகையிலும் முன்னேறியுள்ளதைச் சுட்டிப் பெருமை கொள்கிறார். சொந்த நாடு என்பது போலவே சொந்த ஊர்' என்பது ஒரு சுகமான உணர்வைத் தோற்றுவிப்பது இயல்பே. அவ்வகையில் கவிஞர்தம் சொந்த ஊரான இராயவரத்தையும், இளமையில் அங்கு அவர் செய்த நாட்டு விடுதலைத் தொண்டினையும் எண்ணி இறும்பூதெய்துகிறார். சீரிய சிந்தனையாளர் பாடல் வாயிலாகப் பல சீரிய சிந்தனைகளைக் குழந்தைகட்குப் பாலில் தேன் கலந்தது போலச் xi