பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J தம்பி பிறந்த நாள் எங்கள் தம்பி பிறந்தநாள்: இனிய தம்பி பிறந்தநாள்! திங்கட் கிழமை இன்றுதான் செல்லத் தம்பி பிறந்தநாள்! வண்ணச் சட்டை உடலிலே. மணிகள் தொங்கும் கழுத்திலே. கொண்டை அணிந்து கண்ணன்போல் கொஞ்சு கின்றான் மழலையில். தோட்டம் நடுவே ஊஞ்சலில் தூக்கி வைத்தோம் தம்பியை. ஆட்டி ஆட்டி விடுகிறோம்; அசைந்தே ஆடி மகிழ்கிறான். மாலைத் தென்றல் காற்றுமே வந்து மெல்ல வீசுது. நீலம், சிவப்பு, மஞ்சளில் நிறைய பலூன் பறக்குது: 115