பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து எழுத்தைத் தேடித் தேடிப் பிடித்துக் கண்கள் எரிய இரவு நேரம் கல்வி தன்னைக் கற்று வந்தேன். அந்தக் காலம்-அது அந்தக் காலம். அரிசி வாங்கப் பணமும் இன்றி அடுப்பு மூட்ட வழியும் இன்றி இருந்த போதும் சம்ப ளத்தை எப்ப டியோ கட்டி வந்தேன். அந்தக் காலம்-அது அந்தக் காலம். ஐந்து வகுப்புப் படிப்ப தற்குள் அதிகத் தொல்லை அடைந்த தாலே அந்த வகுப்பில் தேர்வு பெற்றும் அந்தோ படிப்பை நிறுத்தி விட்டேன். அந்தக் காலம்-அது அந்தக் காலம். பேரன் அதிக தூரம் நடந்தி டாமல் அருகி லுள்ள பள்ளி சென்று மதிய உணவும் உண்டு விட்டு மகிழ்ச்சி யோடு கற்று வருவேன். இந்தக் காலம்-இது இந்தக் காலம். 120