பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豹 d மனிதனும் தேனியும் மனிதன்: தேடிச் சென்று பூவிலே தேனை எடுக்கும் ஈயேவா. ஜாடி நிறையத் தேனையே தருவேன்; குடித்துச் செல்லுவாய். தேனி. என்னைப் போலத் தினம்தினம் ஈக்கள் தேனை எடுத்தன. கொண்டு வந்து கவனமாய்க் கூட்டில் சேர்த்து வைத்தன. கூட்டைக் கலைத்தே ஈக்களைக் கொன்று விட்டுத் தேனையே வீட்டில் சேர்த்து வைக்கிறீர். விருந்து தரவா அழைக்கிறீர்? எத்திப் பிழைக்க நானுமே எண்ண மாட்டேன். ஆதலால், புத்தம் புதிய தேனையே பூவில் எடுக்கப் போகிறேன். 134