பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட்டுவின் கீர்த்தி பட்டம் ஒன்றைப் பெரியதாய்க் கட்டி அதனின் நடுவிலே கொட்டை எழுத்தில் என்பெயர் பட்டை அடித்து எழுதினேன். வெட்ட வெளியில் நின்றுநான் விட்டேன் நூலில் கட்டியே. வெட்டி வெட்டி இழுக்கவே பட்டம் மேலே சென்றதே! எட்டி வானைத் தொட்டிடும் இன்ப மான வேளையில், பட்டென் றந்த நூலுமே நட்ட நடுவில் அறுந்ததே! கட்ட விழ்ந்த காளைபோல் காற்ற டித்த திசையிலே பட்டம் பறந்து சென்றதே! விட்டுத் திரும்ப முடியுமோ? 135