பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசுதலே உயர்வு தரும்; ஒருவர்க்கொருவர் சண்டையிட்டால் உள்ளதையும் இழப்போம்; பிறரது உரிமையை மதிப்பதே சுதந்திரம் என்பன போன்ற அரிய நீதிகளை எளிய கதைகள் வாயிலாகக் கவிஞர் குழந்தைகட்குப் புகட்டுவது போற்றுதற்குரியது. நன்னம்பிக்கையாளர் குழந்தைகள் ஊக்கப்படுத்தி உயர்நிலைக்கு அவர் களைக் கொண்டுவர கவிஞர் பெரிதும் முயல்கிறார். ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார்: என்பது அழ. வள்ளியப்பாவின் அமுத மொழி. அதேபோல இந்நூலுள்ளும், ஏழைக் குடிசையில் பிறந்தாலும் எத்தனை துன்பப் பட்டாலும் நாளைய தலைவர் ஆவதற்கு நாளும் முயற்சி செய்திடுவேன்! எனும் இப்பாடல் இன்று குழந்தைகளேயாயினும் இனி இந்த நாட்டினை ஆளப் பிறந்தவர் குழந்தைகளே என நம்பிக்கை கொண்டவர் கவிஞர் என்பதைத் தெளிவு படுத்துகிறது. சுவைத்தேன் கவியாளர் படிக்கப் படிக்க நெஞ்சில் சுவையேற்றும் பாத் தொகுப்பே சிரிக்கும் பூக்கள் என்னும் இந்நூல். அழ. XV