பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“என்னை நம்பி மூட்டையை ஏற்றி ஒருவர் அனுப்பினார். என்ன சொல்வேன் அவரிடம்?" என்றே கந்தன் கலங்கினான். கத்தி ஒன்றைக் காட்டியே "குத்திக் கொன்று போடுவேன். செத்துப் போக ஆசையா?” திருடன் மேலும் மிரட்டினான். எந்தப் பேச்சும் பயனில்லை என்ப தறிந்து கந்தனும் தந்தி ரத்தின் உதவியால் தப்பிப் பிழைக்க எண்ணினான். “கொண்டு வந்த நெல்லுமே கொள்ளை போன தென்றுநான் சொன்னால் ஊரார் நம்பிடார். தொழிலும் கெட்டுப் போகுமே! மூட்டை நெல்லைத் தந்திட முடிய வில்லை. ஆதலால் மாட்டை அவிழ்த்துத் தருகிறேன். மகிழ்ச்சி யோடு சென்றி.டு. இந்த மாடு என்றனின் சொந்த மாடு. ஆதலால் என்றன் உயிரைக் காக்கவே இதனைத் தருவேன்' என்றனன். 467