பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தச் சமயத்தில் அவ்விடத்தே-ஒர் அப்பாவி இந்தியர் வந்தடைந்தார். வந்தவர் யார்என ஒருவருமே-அந்த மாணவர் கூட்டத்தில் கேட்கவில்லை. ஏதும் விசாரணை செய்யவில்லை-ஆனால், ஏவினர் வேலைகள் செய்திடவே. சாதுவாம் அந்த மனிதருமே-சற்றும் தயங்கிட வேண்டுமே! இல்லை, இல்லை! பாத்திரம் தேய்த்தனர்; பற்றுத் துலக்கினர்; பம்பர மாய் வேலை செய்தனரே. வேர்த்து விறுவிறுத் தேஅவரும்-பல வேலைகள் செய்திடும் வேளையிலே, வ.வெ.சு.ஐயர் எனும்பெரியார்-அங்கு வந்தனர்; சுற்றிலும் பார்த்தனரே. ஏவல் புரியும் மனிதரைக் கண்டதும் ஏனோ துடியாய்த் துடித்தனரே. 'அடடே, இவர்தாம் காந்தி: யென்றார்-"நம் அருமை விருந்தினர் இவரே" என்றார். உடனே அனைவரும் மன்னிப்புக் கோரிட, உத்தமர் காந்தி உரைத்திடுவார். “ஒன்றாகச் சேர்ந்து சமையல்செய்தோம்-இது ஒற்றுமை தன்னையே காட்டுமன்றோ? நன்றாய் உழைத்துநாம் உண்பதிலே-சற்றும் நாணமே இல்லை; உணர்ந்திடுவோம்!” 176