பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்: தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்து 1966-ல் அச்சங்கத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். தென்மொழிப் புத்தக டிரஸ்டில் பணி: ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிறுவிய தென்மொழிப் புத்தக டிரஸ்டில் குழந்தைப் புத்தகத் gačf sigosauquirmé (Special Officer for Children's Books) 5% ஆண்டுகள் பணிபுரிந்து, தென் மொழிகள் நான்கிலும் பல நூல்கள் வெளி வரவும், அவற்றில் பல பரிசுகளும் பாராட்டு களும் பெறவும் உதவினார். பாராட்டு: 1961; மூன்றாவது குழந்தை இலக்கிய மாநாட்டில் கேடயம் வழங்கியவர்: குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் ஹஅசைன் அவர்கள். 1963 லக்னோவில் நடந்த அனைத்திந்திய குழந்தை இலக்கிய மாநாட்டிலே வெள்ளிப் பதக்கம். 1972 பாரதி இளைஞர் சங்க விழாவில் பிள்ளைக் கவியரசு' பட்டம் பொறித்த கேடயம். 1975: தமிழ்க் கவிஞர் மன்றத்தின் முதல் மாநாட்டில் கேடயம், 1977 குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவில் கேடயம் வழங்கிப் பொன்னாடை போர்த்தியவர் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமத் அவர்கள். 1979: சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழாவில் மழலைக் கவிச் செம்மல் பட்டம் பொறித்த கேடயம். 1982. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்திய சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டமும், ரூ. 5000/- மதிப்புள்ள பொற்பதக்கமும். 1982: கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவில் குத்துவிளக்கு. 1985: புதுடில்லியில் நடந்த அனைத்திந்திய குழந்தைகள் கல்வி மாநாட்டில் கேடயம். மொழிபெயர்ப்பு: இவரது நம் நதிகள்’ எனும் தென்னாட்டு ஆறுகளைப் பற்றிய நூலை, நேஷனல் புக் டிரஸ்ட் 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது. தெலுங்கில் இவரது பாடல் 207