பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரியைக் கூறிவிட்டு அவனே யார் உதவியும் இல்லாமல் உண்டான். ஒருநாள் நான் வெளியே புறப்பட்டுக் கொண் டிருந்தேன். 'நானும் வருவேன்' என்றான் அரவிந்தன். ‘வெகுதூரம் நடக்கணும். கால் வலிக்கும்.” 'வவிக்காது. நான் நடப்பேன்." அவனும் நானும் நடந்தோம். சிறிது தூரம் சென்றதும், நின்றுவிட்டான். 'ஏன் நின்று விட்டாய்?’ என்று கேட்டதற்கு, "கால்... வலிக்குது...” என்று இழுத்தான். உடனே நான், ஆண்டவன் கொடுத்த கால் எதற்கு? என்று கேட்டேன். ஆண்டவன் கொடுத்த கால் எதற்கு? கால் எதற்கு? என்று கூறியவன் திடீரென்று, அரவிந்த் ஜோராய் நடப்பதற்கு. என்று கூறிவிட்டு, உற்சாகமாக என்னையும் முந்திக் கொண்டு நடந்தான். ஆண்டவன் கொடுத்த கை அள்ளிச் சோறு தின்பதற்கு மட்டும்தானா என்று நினைத்த நான், கைகளின் பயன்களை எடுத்துக் கூறும் சில வரிகளை மேலும் சேர்த்துப் பாடலாக்கினேன். 4