பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுமுறை மலர்களிலும், கண்ணன், கோகுலம், ரத்னபாலா, கலைமகள், குமுதம், ஆனந்தவிகடன், அமுதசுரபி முதலிய இதழ்களிலும் இடம் பெற்றவை. வண்ணப் படங்களுடன் அப்பாடல்களை வெளி யிட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கும் வானொலி, தொலைக்காட்சி வாயிலாக என்னுடைய சில பாடல்களை ஒலி/ஒளி பரப்பிய நிலையத்தாருக்கும் நான் என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன். நான் முன்பு வெளியிட்ட மலரும் உள்ளம்: என்னும் இரு தொகுதிகளிலும் உள்ள பாடல்களைப் பாடி இன்புற்றதைப் போலவே, இந்த சிரிக்கும் பூக்கள் தொகுப்பிலுள்ள பாடல்களையும் குழந்தைகள் உலகம் படித்து, பாடி இன்புற்றால், அதுவே நான் அடையும் பேரின்பமாகும். அழ. வள்ளியப்பா 'உமா இல்லம்' ஏ.எல். 183, அண்ணாநகர், சென்னை-40. 11