பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன கொண்டு வந்தேன்?

பழநி மலைக்குச் சென்று வந்தேன்;
பஞ்சா மிர்தம் கொண்டு வந்தேன்.

காசி நகரம் சென்று வந்தேன்;
கங்கை நீரைக் கொண்டு வந்தேன்.

திருப்ப திக்குச் சென்று வந்தேன்;
தித்திப்பு லட்டுக் கொண்டு வந்தேன்.

இராமேஸ் வரம் சென்று வந்தேன்;
என்ன நானும் கொண்டு வந்தேன்?

26