பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உதவும் கத்தி


பென்சில் சீவ உதவிடும்
பெரிய பழத்தை நறுக்கிடும்

மரத்துப் பட்டை சீவிடும்
வாழை இலையை அறுத்திடும்

ஒலை நறுக்க உதவிடும்
உடைத்த தேங்காய் கீறிடும்

கயிற்றை அறுக்க உதவிடும்
காய் கறிகள் நறுக்கிடும்

நன்மை செய்ய நித்தமும்
நமக்கு உதவும் கத்தியால்,

கவனக் குறைவி னாலேநாம்
காயப் படுத்திக் கொள்வதா?

39