பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தலையில் வகிடு எடுத்த தைப்போல்
சாலை தெரியுது.
தவழும் குழந்தை போல மோட்டார்
வண்டி நகருது.

நிறையக் கப்பல் துறை முகத்தில்
நின்றி ருக்குது.
நிமிர்ந்து நிற்கும் கோபு ரங்கள்
எங்கும் தெரியுது.

உயர்ந்த கூண்டு நாலு புறமும்
மணியைக் காட்டுது.
உச்சி யிலே சிலுவை கூட
நன்கு தெரியுது.

புகையில் லாத ரயிலும் ஊரில்
புகுந்தே ஓடுது.
பொம்மை ரயில் போலே அதுவும்
எனக்குத் தோணுது.

மரங்கள் எல்லாம் வீடுகளை
மறைத்து நிற்குது
மாமா வீடு எங்கே? எங்கே?
மனசு தேடுது!


46