பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனாடுகளில் குழந்தை இலக்கியம்

இங்கிலாந்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டளவிலேயே பாதிரிமார்களும் கற்றறிந்தோரும் குழந்தைகட்கெனத் தனியே பாடநூல்கள் எழுதலாயினர். ஆல்ட்கெல்ம் (Aldhelm) (604-709) என்னும் பாதிரியாரே இங்கிலாந்திலே முதன்முதல் குழந்தைகட்குப் பாடநூல் எழுதியவர். அது வினா-விடைக் கவிதைகளாக அமைந்திருந்தது. அல்குயின் (Alcuin) என்பார் எட்டாம் நூற்றாண்டில் எழுதிய பாடநூல் உரையாடல் முறையிலிருந்தது. பத்தாம் நூற்றாண்டினரான ஏயெல்பிரிக் (Aetfric) எனும் கல்வியாளர் குழந்தைகள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பொருள்களைப் பாடுபொருளாகக் கொண்டு வினா-விடை முறையில் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில் குழந்தைகட்கான கலைக் களஞ்சியம் முதன்முதல் வெளிவந்தது. எலூசிடாரியம் (Elucidarium) எனப் பெயர் பெற்ற இக்களஞ்சியத்தைக் காண்டர்பரியின் தலைமைப் பாதிரியாரான ஆன்செல்ம் (Anselm) (1033-1109) என்பார் எழுதியுள்ளார். ஜான் அமோஸ் முகானமிஸ் என்பவரால் எழுதப்பட்டு 1751-இல் வெளியிடப்பட்ட நூலே ஐரோப்பாவில் முதன்முதலாகப் பட விளக்கங்கள் கொண்ட பாடநூலாக அமைந்தது. குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து அவர்களின் மன உணர்வுகளை நிறைவு செய்யும் வண்ணம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஜான் நியூபெர் (1713-1767) என்னும் புத்தக விற்பனையாளர் குழந்தைகட்கெனத் தொடர் வெளியீடாகப் பல நூல்களை வெளியிட்டார். பத்தொன்பதாம்

v