பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'அ' 'ஆ' எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அப்பா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.

'அ' 'ஆ' எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அம்மா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.

எத்தனை பேர்கள் எழுதப் படிக்க
இவரிடம் கற்றுக் கொண்டனரோ!
அத்தனை பேரும் அன்புடன் மதிக்கும்
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.

50