பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூற்றாண்டில் இங்கிலாந்தில் குழந்தைகட்கெனப் படைப்பிலக்கியங்களும் தோன்றலாயின.

தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சி

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வி முறையும் நம் நாட்டில் நுழைக்கப்பட்டதால் அவர்களுடைய பாடநூல்களையொப்ப தமிழ்நாட்டுக் குழந்தைகட்கும் பாடநூல்கள் எழுதப் படலாயின. தொடக்கப்பள்ளி மாணவர்கட்கென எழுதப்பட்ட நூல்களில் இடையிடையே பாடல்கள் இடம் பெற்றன. ‘அ இது ஒர் அத்திப் பழம்...’ என்பது போன்ற பாடல்களை முதன் முதலில் எழுதி வெளியிட்டவர் திரு. கா. நமசிவாய முதலியார் ஆவர். அதையொட்டி மணி மங்கலம் திருநாவுக்கரசு அவர்களும், மயிலை சிவமுத்து அவர்களும், பாடநூல்களில் பாடல்கள் எழுதினர்.

ஆணிவேர் அழ. வள்ளியப்பாவே

இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்துதான் பாடநூல்கள் அல்லாத குழந்தைகட்கென்றே தனியாக எழுதப்பட்ட பாடல் நூல்கள் வெளிவரலாயின. இவ்வகையில் முன்னோடியாக விளங்கியவர் அழ. வள்ளியப்பா அவர்களே! அவர் எழுதிய குழந்தைக் கவிதைகள் அடங்கிய ‘மலரும் உள்ளம்’ (முதற்றொகுதி) 1954இல் வெளிவந்தது. பின்னர் 1961இல் ‘மலரும் உள்ளம்’ (இரண்டாம் தொகுதி) வெளிவந்தது. இன்று நூற்றுக்கணக்கானோர் அவர் நடையைத்தம் நடையாகவும், அவர் கருத்தைத் தம் கருத்தாகவும், அவர் உத்தியைத் தம் உத்தியாகவும் கொண்டு கவிதைகள் எழுதி

vi