பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரவட்டை ஊர்ந்து செல்லும் அட்டையைக் கூர்ந்து பார்த்தேன் நானுமே. அடடே, கால்கள் எத்தனை? யாரால் எண்ண முடியுமோ? ஆயி ரந்தான் இருக்குமோ? அதற்கு மேலும் போகுமோ? இரண்டு கால்கள் உடைய நான் என்ன வேகம் செல்கிறேன். ஆயி ரங்கால் இருந்துமே அதற்கு வேகம் இல்லையே! கிட்டச் சென்றே அட்டையைத் தொட்டுப் பார்த்தேன், நானுமே. சட்டென் றந்த அட்டையும் வட்ட மாகச் சுருண்டதே! 63