பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த. கோவேந்தன்,டி.லிட்.,

101


96. மனித உடையில் குரங்கு

அரசு அதிகாரி ஒருவர் தமது சட்ட உதவியாளரை அனுப்பி ‘மனித உருவில் இருக்கும் மனிதனல்லாத’ ஒருவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். இந்த வண்ணனை உதவியாளருக்குப் புரியாத புதிராக இருந்தது. குழம்பினான். தன் மனைவியிடம் அது பற்றிக் கலந்தெண்ணினான். அவனின் மனைவியோ மிகவும் புறக்கணிப்பாக “இந்த ஆணையை நிறைவேற்றுவது கடினமானது அல்ல; மிகவும் எளிது” என்றாள். “ஒரு குரங்கிற்கு மனிதனின் தொப்பியையும், உடையையும் அணிவித்துப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பணி முடிந்துவிடும்” என்றாள்.

மனைவியின் ஆய்வுரைப்படி செய்தான் ஊழியன். அதிகாரி மகிழ்ந்தான். குரங்கிற்குப் பழங்கள் தந்தான்.