பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்,

103


யாத மடையனே, நீ என்ன என்னிலும் மூப்பா? முன்னிருந்து குதிரையோட்டுகிறாய்?” என்று கேட்டான். உடனே ஏவலன் அதிகாரியின் பக்கவாட்டில் அமர்ந்து குதிரையை ஓட்டினான். மீண்டும் அந்த அதிகாரி “நீ என்ன எனக்குச் சமநிலையில் உள்ளவனா? அருகில் அமர்ந்து குதிரையை ஓட்டுகிறாய்?” என்றான். பின் அந்த ஏவலன், வண்டியின் பின்புறம் அமர்ந்தவாறு குதிரையினை ஓட்டினான். மீண்டும் சினமுற்ற அந்த அதிகாரி “குதிரை ஓடும் போது எழும் தூசுகளெல்லாம் நேரிடையாக என் மீது வந்து படுகின்றனவே என்றான். வேறு வகையறியாத அந்த ஏவலன் வண்டியை விட்டுக் கீழிறங்கி “ஐயா, எப்படி நான் வண்டியினை ஓட்டுதல் வேண்டும் என்று கட்டளையிட்டால், அவ்வண்ணமே செய்கிறேன்” என்று பணிவுடன் கூறினான்.

அதனைக் கேட்ட அதிகாரி “நீ எங்கிருந்து ஓட்டினாலும் எனக்கு அக்கறையில்லை. நீ குடித்த கம்பங்கூழிற்கு நான் கொடுத்த பணத்தை இப்போதே திரும்பத் தந்து விட்டால், நீ எப்படி எங்கிருந்து குதிரையை ஓட்டினாலும் எனக்கு ஏற்புடையதே” என்றார்.


98. யாரும் முட்டாள் இல்லை

பொறுமைமிக்க மனிதன் ஒருவன் ஒருநாள் ஓர் இணை காலணிகளை வாங்கினான். எதிரில் அவ்வழியாய் வந்த முன்கோபி ஒருவன் “எவ்வளவு பணம் இதனை வாங்கத் தந்தாய்?” என்று கேட்டான். எதிலும் எளிதாகவும் அமைதியாகவும் செயல்படும் முதல் மனிதன் மெதுவாக ஒரு காலணியினை உயர்த்திக் காண்பித்து ‘25 பணம் ஆனது’ என்றான். அவன் சொல்லி முடிக்கும் முன் ஆத்திரக்காரன்