பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


கொட்டினான். இருப்பினும் அது மறையவில்லை. கோபமுற்ற வழிப்போக்கன் “நீ அதிகம் கேட்கிறாய்; மிக அதிகம் கேட்கிறாய்” என்றவாறு தான் வைத்திருந்த நாணயங்கள் அனைத்தையும் வைத்தான். உடனே கை உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டது.

வழிப்போக்கன் வியப்புற்றான். வியப்பு மேலிட விளக்கொன்றை ஏந்திய வண்ணம் ஒவ்வொரு கல்லறையிலும் எழுதப்பட்டிருந்த வாசகங்களை படித்துப் பார்த்தான். கீழ்ப் பகுதியில் காணப்பட்ட கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் வறுமையால் மடிந்தவர்கள் என்று அறிந்தான். மேற்குப் பகுதி கல்லறையில் “மதிப்பிற்குரிய திரு. அவர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரி. ........ மாநிலம்” என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு, வியப்பு நீங்கவும், விளக்கம் பெற்றான் அந்த வழிப்போக்கன்.

100. குடிகாரன் சூளுரை

ஓயாத குடியன் ஒருவன் இருந்தான். “உன் உடல் நலத்தைக் காக்கவாவது நீ குடிக்காமல் இருக்க வேண்டும்” என்று அவன் நண்பர்கள் அவனைக் கேட்டுக் கொள்கின்ற பரிதாப நிலை ஏற்படும் வரை நீ குடித்துக் கொண்டேயிருந்தான். குடிகாரன் தன் நண்பர்களிடம் “நானும் குடியை முழுமையாக விட்டு விடத்தான் நினைக்கிறேன். ஆனால் என் மகனின் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது. அவனது பிரிவாற்றாமையை மறக்கத்தான் குடிக்கிறேன். அவன் மட்டும் என்னிடம் திரும்பி வந்துவிட்டால் குடியை நிறுத்தி விடுவேன்” என்றான்.

இதனைக் கேட்ட அவனது நண்பர்கள் “அப்படியானால் இப்போது நீ சொல்லியபடி வாக்குத் தவறாது