பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

109


இருந்தது. தொழிலை முன்னேற்ற திருமண இணைகளின் படம் ஒன்றை வரைந்து அதைக் கடையில் மக்கள் பார்வைக்கு வைத்தால், புதிதாகத் திருமணமான இணையர்களைக் கவரலாம் என்று ஒருவர் ஆய்வுரை சொன்னார். அவர் ஆய்வுரையின் படி ஓவியர் தம் திருமணப்படத்தையே மிகவும் பெரிதாக வரைந்து தமது நிலையத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தார்.

ஒருநாள் ஓவியரின் நிலையத்திற்கு அவருடைய மாமனார் வந்தார். பலகணியில் வைக்கப்பட்டிருந்த மணஇணையரின் உருவப்படத்தை நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்தார். படத்தில் இருப்பது யாரென்று தெரியாமல் போகவே, ‘யார்? இந்தப் பெண்?’ என்று மருமகனிடம் கேட்டார். மருமகன் “உங்கள் மகள் தான்’ என்றார். மேலும் சற்று நேரம் பார்த்தப்பின், “அது என் மகளானால் நீங்கள் ஏன் வேறு ஒருவரை மணம் செய்து கொண்டிருப்பது போல் வரைந்துள்ளீர்கள்?” என்று வியந்து கேட்டார்.

104. உருவப்படத்தில் அடையாளம் காணுதல்

ஓர் உருவப்படம் வரைந்து முடியும் தருவாயில், படத்தை வேறு ஒருவரிடம் காட்டி அவ் உருவத்தின் சாயலைத் தீர்மானிக்கச் சொன்னார் ஓவியர். தலை கவிப்பினை வைத்து அது நீங்கள் தான் என்று அடையாளம் காண்கிறேன் என்று ஓர் ஆள் தெரிவித்தார். இரண்டாவது ஆள் உங்கள் மேலாடையை வைத்து உங்களை அடையாளம் கண்டு கொள்கிறேன் என்றார். மூன்றாவது ஆளை ஒவியர் முன்னதாகவே அணுகி ஏற்கனவே என் கவிப்பின்