பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

111


கணித்துச் சிறுபான்மையை வைத்துக் கொள்வீர்கள் என்று நான் எப்படி அறிவேன்?" என்றாள்.

107. காக்கி நிறத் தாடி

செந்நிறத் தாடி வைத்திருந்த ஒரு மனிதன் தன் மனைவியிடம், "இப்படிபட்ட வெளிறிய வண்ணத்தில் தாடி வைத்திருப்பவர்கள் மிகவும் அரிது. அதுமட்டுமல்லாது மெல்லிய வண்ணத் தாடியுடையவர்கள் எப்படிப்பட்ட முரடர்களையும் சண்டையில் வெற்றியடைய முடியும்" என்று பெருமைபட்டுக் கொண்டான்.

ஒருநாள் வெளியில் சென்ற அவன் சற்று நேரத்தில் வீங்கிப்போன முகத்துடன் வீடு திரும்பினான். அவனது மனைவி அவன் முன்பு வீரம் பேசியதை சுட்டிக்காட்டிக் கேலி செய்தாள். அதற்கு அவன் “நான் ஒரு சிவப்புத் தாடியுள்ள மனிதனை எதிர்த்து சண்டையிடுவேன் என்று முன்பே எனக்கு எப்படித் தெரியும். இன்று அப்படிபட்ட சிகப்புத் தாடியுள்ள மனிதனோடு சண்டையிட வேண்டியதாயிற்று" என்றான்.

குறிப்பு: சீன நாட்டில் கருப்பு நிறத்தாடி உடையவர்களே அதிகம். ஒரு சிலரே வெளிர் நிறத்திலும், சிகப்பு நிறத்திலும் தாடி வைத்திருந்தனர்.

108. தரையில் சிக்கிய குள்ளன்

குள்ளன் ஒருவன் படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். திடீரென்று படகு ஆழம் குறைவான இடத்தில் தரையில் தட்டி சிக்கிக் கொண்டது. குள்ளன் தரையில்