பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

115


மனைவியின் முகத்தில் ஏராளமான சுருக்கங்கள் இருப்பதைக் கண்டார். சுருக்கங்களைக் கண்டு கவலைப்பட்ட அவர் "உன் உண்மையான வயதுதான் என்ன?" என்று மனைவியிடம் கேட்டார். "நாற்பது" இருக்கும் என்றாள். "ஆனால் திருமணச் சான்றிதழில் குறிப்பிடும் போது முப்பத்தெட்டு என்று சொன்னாயே" சினந்து கொண்டான் கணவன். "என் கணக்குப்படி உனக்கு 45 வயது இருக்கும். ஏன் பொய் சொன்னாய்" என்றான் கணவன். “தொடர்ந்து உண்மையைச் சொல்வதானால், எனக்கு 54 வயது ஆகிறது" என்று சொல்லி மேலும் அதிர வைத்தாள் அந்த ஆரணங்கு. மேலும் மேலும் உன் உண்மையான வயதைச் சொல் என்று கேட்டபோது அவள் 54, என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லி வந்தாள்.

பின்னர் அவர்கள் படுக்கையில் படுத்ததும் அவள் உண்மை வயதைத் தெரிந்து கொள்ள வகைதேடி சிந்தித்த வண்ணமிருந்தான் கணவன். திடீரென்று படுக்கையை விட்டு எழுந்து “கொஞ்சம் பொறு. உப்புப் பானையை மூடி வைத்தேனா? இல்லையா? என்று பார்த்து வருகிறேன், திறந்திருந்தால் எலி தின்றுவிடும்” என்றான் அவன். பட்டென்று அவள் சொன்னாள்" என்னுடைய 68 ஆண்டுகால வாழ்வில், ஒருபோது கூட எலி உப்பைத் தின்னும் என்று சொல்லக் கேள்விப்பட்டதில்லை” என்று.

114. தேநீர் கேட்டு ஒருவன்

வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தார். கணவன் மனைவியிடம் தேநீர் படைத்துக் கொண்டு வரச் சொன்னான். "இதுவரை நீங்கள் தேயிலையே வாங்கித் தந்ததில்லை எப்படி தேநீர் உண்டாக்க முடியும்” என்றாள்