பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


மனைவி. “சரி கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்க வைத்தாவது கொடு” என்றான் கணவன். “விறகு வாங்கிப் போட்டதே இல்லை. தண்ணீரை எப்படிக் கொதிக்க வைக்க முடியும்?“ எதிர் கேள்வி கேட்டாள் மனைவி. சினத்தில் கொதித்தான். கொச்சைச் சொற்களைக் கொப்பளித்தான் மனைவி மீது. ”தலையணைகளில் வைக்கோல் துரும்பு கூடவா இல்லை” மனைவியிடம் சீறினான். அதுவரை பொறுத்த அவளும் பொங்கினாள். பொன்மொழிகளை அவன் மீது உதிர்த்தாள். பின்னர் சொன்னாள் செங்கற்களை தலையணையாகப் பயன்படுத்தும் நமது வீட்டில் வைக்கோற் துரும்பேது?" என்றாள் அந்தத் தக்க விடை தந்த தகைசால் பத்தினி.


115. நாளை சற்று முன்னதாகவே வா

கடன் கொடுத்த அனைவரும் கடன் வாங்கியவன் வீட்டில் ஒட்டு மொத்தமாய்க் குழுமி அங்கிருந்த முக்காலிகளில் அமர்ந்தனர். ஒருவன் வீட்டினுள் உட்கார இடமின்றி முற்றத்து மொட்டை மாடியில் ஏறி நின்றான். முற்றத்து மொட்டை மாடியில் உட்கார இடமன்றி நின்று கொண்டிருந்தவனிடம் கடன்பட்டவன் சொன்னான் “நாளைக்குச் சற்று முன்னதாகவே வந்து விடு என்று சைகை செய்து காட்டினான். முற்றத்து மொட்டைமாடியில் நின்றவன், மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்து நாளை நம் கடனைத் திரும்ப தருவதற்குத் தான் முன்னதாகவே வரச் சொல்லுகிறான் என்று எண்ணி மகிழ்ந்தான். வெளியேறிய அவன் தன்னைப் போல் கடன் கொடுத்த மற்றவர்களிடம் “இன்று இரவு மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டுச் சென்றான். எல்லோரும் கலைந்து சென்றனர்.