பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


“நீங்கள் ஒரு தொழில் புரிய வேண்டும். ஓரிணைக் கண்களைக் கொண்டு ஒரு மனிதனின் எதிர்காலம் முழுமையையும் கணித்து விடமுடியாது” என்றான் அந்த மனிதன்.

7. நாமெல்லாம் ஒன்று

ஒருமுறை அறிஞர் ஒருவர் “இயற்கைப் படைப்புகள் அனைத்தும் ஒன்றே” என்ற மெய்மை விளக்கம் தந்து கொண்டிருந்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு படித்த மேதை “பகுத்தறிவு கொண்ட ஒரு மனிதன் கடற்பூதங்களையும்; புலிகளையும் அடக்கியாள முடியுமா?