பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்



சிற்றூர்வாசியின் முடிவான விடை கேட்டுக் குழுமி இருந்தோர் வாயடைத்துப் போயினர். எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்றனர். சிற்றுர்வாசி விளக்கினார், "வருண தெய்வத்திற்குத் தை மாதம் 14ம் நாள் வழியனுப்பு விழா கொண்டாடுவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அத் தெய்வம் விண்ணகம் சென்று, மண்ணகக் கணக்கை இறைவனுக்கு தந்துவிட்டு, மண்ணகம் திரும்புகிறார். மீண்டும் நிலவுலகில் அவரை வரவேற்க புத்தாண்டின் தொடக்கத்தில் விழா கொண்டாடுகிறோம். இவ்வாறு மண்ணகத்திலிருந்து விண்ணகம் சென்று மீண்டும் மண்ணகம் திரும்ப அதாவது 400 கல்கள் சென்று வர ஓர் ஆண்டு காலம் ஆகிறது” என்று.

இந்த விளக்கம் கேட்டு அனைவரும் நகைத்தனர். “உங்கள் விளக்கம் அற்புதம்; உங்களிடம் சிறந்த சொல்லாற்றல் உள்ளது" என்று அச்சிற்றூர் வாசியைப் பாராட்டினர்.

119. சோம்பேறி

சோம்பேறிப் பெண்ணொருத்தி அனைத்திற்கும் தன் கணவனையே சார்ந்திருந்தான். உண்ணும் போது வாயை திறக்கின்ற வேலையையும், உடுத்தும்போது கையை தூக்கி நிற்கின்ற வேலையை மட்டுமே செய்து வந்தாள். ஒருசமயம் கணவன் பட்டணம் சென்று ஐந்து நாள்கள் தங்க நேர்ந்தது. அவளுக்கு உணவூட்டுவதற்காகக் கணவன் மிகப்பெரிய 'மாவடை’ ஒன்றினைப் படைத்து அவற்றின் நடுவில் ஒரு பெரிய துளையிட்டு, அவள் கழுத்தில் மாட்டிவிட்டான்.