பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

121


ஐந்து நாள்களுக்கு அந்த மாவடை போது மென்று அவன் கணித்தான். இவற்றைச் செய்தபின், அவன் பட்டணம் சென்றான். திரும்பிச்திரும்பி வந்தபோது அவன் மனைவி இறந்து மூன்று நாள் ஆகியிருந்ததை அறிந்தான். மாவடையில் அவள் வாய்க்கு எதிராக இருந்த பகுதிமட்டுமே சாப்பிடப்பட்டிருந்தது. எஞ்சிய பகுதிகள் அனைத்தும் தொடப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தன.

120. கஞ்சனின் ஆவி

கஞ்சத்தனமான வாழ்கை வாழ்ந்தான் ஒரு மனிதன். உண்பது அரிது. அவனை எல்லோரும் கஞ்சனின் ஆவி என்று அழைத்தனர். ஒருநாள் படகுக் கூலி கொடுக்க மனமில்லாமல் ஆற்றின் குறுக்கே நடந்து செல்ல முயன்றான். நட்டாற்றில் வந்தபோது வெள்ளம் அவனை அடித்துச் செல்ல முனைந்தது. உதவிகோரிக் கதறினான். 200 பணம் முன்பணமாக தந்தால் காப்பாற்றுவதாகப் படகோட்டி ஒருவன் சொன்னான் ‘நூறு பணம் போதாதா?” என்று கேட்டான் கஞ்சன். இப்போது தண்ணி அவன் மார்பளவை எட்டியது. "பின் 150 பணம் தந்தால் போதுமா?" என்றான் கஞ்சன். படகோட்டி மறுத்தபோது கஞ்சன் தண்ணீரில் மூழ்கினான்.

‘கஞ்சனின் ஆவி’ என்று அழைக்கப்பட்ட அக்கஞ்சன் தற்போது உண்மையிலேயே ஆவி ஆகி மேலுலகம் சென்றான். நரக தேவன் அவனைப் பார்த்து முழங்கினன். "கஞ்சனே பணம் தான் உன் வாழ்க்கை என்று நினைத்தாய்; ஒரு காசு கூட செலவு செய்ய மறுத்தாய்; இப்போது நரகத்தில்