பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த. கோவேந்தன், டிலிட்.,

15


யாரைக் தேர்ந்தெடுப்பது. பெண் வீட்டாருக்குக் குழப்பமாக இருந்தது. முடிவைப் பெண்ணின் விருப்பத்திற்கு விட்டு விட்டனர். “இரண்டு இளைஞர்களையும் மணந்து கொள்கிறேன்” என்றாள் மணப்பெண். “கீழை (கிழக்கே உள்ள) வீட்டில் உண்ணுகிறேன்; மேலை (மேற்கேயுள்ள) வீட்டில் உறங்குகிறேன்” என்று தன் முடிவுக்கு விளக்கமும் தந்தாள் அந்த நங்கை. அருமகள்.

14. உயர் அதிகாரியின் கடமைகள்

பிறர் பொருளை இச்சிக்கும் இயல்பும் கையூட்டுப் பெறும் பழக்கமும் கொண்ட உயர் அதிகாரி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவருடைய வேலைக்காரன் அவரின்