பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


காலணிகள் நைந்திருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டினான். உடனே அந்த உயர் அதிகாரி, எப்போதும் புதிய காலணிகளை அணியும் வேறு ஒரு சார்புப் பணியாளரை அழைத்து வரும்படி தன் வேலைக்காரனுக்கு ஆணையிட்டார். அவ்வாறே அவனும் அழைத்து வந்தான். வந்த அந்த சார்புப் பணியாளரை மரத்தில் ஏறி பழங்களைப் பறிக்கக் கட்டளையிட்டார். அவனும் தான் அணிந்திருந்த புதிய அழகிய காலணிகளை மரத்தின் அடியில் கழற்றி வைத்து விட்டு பழத்தைப் பறிக்க மேலே ஏறினான். அவன் மேலே சென்றதும் உயர் அதிகாரியின் வேலைக்காரன் கழற்றி வைத்த காலணிகளைக் தன் அதிகாரியின் ஆணைப்படி திருடிக் கொண்டு சென்றான். இதனைக் கண்ணுற்ற அந்தச் சார்புப் பணியாளர் மரத்தின் மேல் இருந்தவாறே தடுக்க முயன்றான் முடியவில்லை. கீழே இறங்கி வந்து உயர் அதிகாரியிடம் அது பற்றி புகார் செய்தபோது, அந்த உயர் அதிகாரி “மற்றவர்களின் காலணிகளைக் காவல் காப்பது ஒரு மாவட்ட உயர் அதிகாரியின் கடமையன்று” என்றார்.

15. பிந்திவந்த சுவை உணவு

‘மூலன்’ என்பவர் ‘சோழ’ மரபினைச் சார்ந்த ஆளுநர் ஆவார். அமைச்சரின் செயலராக இருந்த அவருடைய மகன் அவருக்கு உணவளிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தார். ஆளுநருக்கு வெறுப்பு ஏற்படும்போதெல்லாம் அதற்குக் காரணமாக இருந்தவர்களுக்குச் சவுக்கடி தண்டனை வழங்குவது அவர் வழக்கம். ஒருநாள் அவருடைய மகன் அவருக்கு வகை வகையான புதிய சுவையான உணவுகளைப் பரிமாறினார். ஆளுநர் மூலன் அன்று வயிறு