பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த.கோவேந்தன், டி.லிட்.,

21


உள்ளாடையையும் யாரோ திருடிச் சென்றிருப்பதைக் கண்டார். குளியலரை மேலாளர் அந்த அதிகாரி வேண்டுமென்றே வேடிக்கை செய்வதாக ஐயப்பட்டார். பின்னர் அந்த அதிகாரி தன் தலைகவிப்பினை எடுத்துத் தலையில் அணிந்தார். பின்னர் காலணிகளையும் அணிந்தார். குளியலரை மேலாளரிடம் சென்று “இந்தக் கோலத்தில் நான் வெளியே நடந்து செல்ல வேண்டுமா?” என்று கேட்டார்.

21. மந்திரத் தாயத்து

கொசுக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மந்திரவாதி ஒருவனிடமிருந்து ‘தாயத்து’ ஒன்றை வாங்கிக் கட்டிக் கொண்டான் பொன்னடி. தாயத்துக் கட்டியும் கொசுக்கடியிலிருந்து அவனால் தப்பமுடியவில்லை. கோபத்துடன் மந்திரவாதியிடம் சென்று தாயத்துத் தக்க பலன் அளிக்கவில்லை என்று முறையீடு செய்தான். மந்திரவாதியோ “தாயத்தை நீங்கள் தக்க இடத்தில் கட்டவில்லை. அதனால்தான் தப்பமுடியவில்லைக் கொசுக்கடியிலிருந்து,” என்றான், “அப்படியானால் எங்கே கட்ட வேண்டும்?” என்று கேட்டான் அந்த மனிதன். “கொசு வலைக்குக் கீழே” என்றார் அந்த மந்திரவாதி.

22. உப்பு அதிகம்

இரண்டு உடன்பிறந்தவர்கள் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இன்று சோற்றுடன் உண்ண என்ன குழம்பு என்று இருவருள் ஒருவன் கேட்டான். “இப்போதுதான் அடுப்பில் கருவாடு சுடப்படுகிறது. சுடப்படும் கருவாட்டை ஒருமுறை பாருங்கள், பின் ஒருவாய் சோற்றினை