பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


“இந்த அற்பச் செயலுக்காக யாரும் தண்டிக்க மாட்டார்களே” என்றான் நண்பன். திருடன் சொன்னான் “நான் எடுத்தக் கயிற்றின் மறுமுனையில் கன்று ஒன்று கட்டப்பட்டிருந்தது” என்று.

25. தடித்த படுக்கை விரிப்புகள்

கோடையில் கொசுவின் தொல்லை தாளாத ஒரு மனிதன் அதைப் பற்றி நண்பனிடம் முறையிட்டுத் தப்பிக்க வழி கேட்டான். அப்போது நண்பன் சொன்னான் “கனமான தடித்த படுக்கை விரிப்புக்கடியில் படுத்துக் கொள்” என்று. “ஏன்” என்று விளக்கம் கேட்டான் அந்த மனிதன். நண்பன் சொன்னான், “கொசுக்கள் உன்னைக் கடிக்க முனையும் போது படுக்கை விரிப்பு அசையும். அப்போது அசையும் விரிப்பில் கொசுவின் கொடுக்குகள் சிக்கி வளைந்துவிடும் படுக்கை விரிப்பில் சிக்கி வளைந்த கொடுக்குகள் குணமடைய 120 நாள்கள் ஆகும். அதற்குள் குளிர்காலமும் தொடங்கிவிடும்” என்று.



26. மாண்புமிகு அய்யா

கொள்ளையடிக்க கொள்ளையர்கள் ஒரு வீட்டில் நுழைந்தபோது, கொள்ளைக் கும்பலின் தலைவனின் மனத்தைக் குளிர்விக்க, “மேன்மைக்கு உரியவரே, தளபதி அவர்களே, விடுதலை வீரரே “என்றெல்லாம் போற்றித் துதித்தான் வீட்டுக்காரன். ஆனால் கொள்ளையர் தலைவனோ அவற்றுக்குச் சற்றும் மசியவில்லை. சோர்ந்து போன வீட்டுக்காரர், “ஐயா தங்களை நாங்கள் எப்படி அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார். அதற்கு அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் “என்னை நீங்கள்