பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

31


ஊதாரித்தனமாகப் பணத்தைச் செலவிட்டதால் அதிகாரி அவனுக்குப் பத்துச் சவுக்கடித் தண்டனை வழங்கினார். ஐந்து அடிகள் விழுந்ததுமே அந்த இளைஞன் தான் தன் இடுப்பிற்கு மேலே உள்ளாடையாக அணிந்திருப்பது எளிய மட்டமான துணியாதலால் ஐந்து அடிகள் போதுமானது என்று சொல்லி மேற்கொண்டு அடிப்பதை அவ் இளைஞன் எதிர்த்தான்.

32. சாப்பாட்டு ஆசை

‘பசிக்கிறது’ என்று அழுதுகொண்டே தன் தந்தையிடம் முறையிட்டது ஒரு குழந்தை. மகனின் முதுகை வருடியவாறு தந்தை “மகனே, உண்பதற்கு உனக்கு என்ன வேண்டும். கடல் அரசன் வருணனின் ஈரல் வேண்டுமாயினும் நீள்விலங்கும் பறவையின் விலாக்கறி வேண்டுமாயினும், எது வேண்டுமாயினும் சொல்; அதை உனக்கு நான் தருவேன்” என்றான். “எனக்கு எளிய சாப்பாடு போதும்” என்று கேட்டான் மகன். “மடையனே” கத்தினான் தந்தை “எப்போதும் நீ, எது நம்மிடம் இல்லையோ அதைத்தான் கேட்கிறாய்” என்று சினந்து கொண்டான் தந்தை.

33. கடினமானது எது

உலகத்தில் கடினமான பொருள் எது என்பது பற்றி இரண்டு மனிதர்கள் தருக்கித்துக் கொண்டிருந்தனர். இரும்புதான் கடினமானது என்றான் ஒருவன். “இல்லை, இரும்பு நெருப்பில் உருகிவிடும். எனவே அது கடினமானது அன்று” என்று மறுத்தான் மற்றவன். “அப்படியானால் கடினமானது-