பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

33



34. வெறும் காக்காப் பொன்

வைக்கோற் துரும்பினைக் காக்காப் பொன்னென்று விற்றுப் பணம் சேர்த்தான் முட்டாள் ஒரு காகிதப்பொன்வணிகன். அவனுடைய முட்டாள் மகனோ அவனுடைய இந்தத் தொழில் கமுக்கத்தைச் சிலரிடம் சொல்லி வந்தான். இதையறிந்த தந்தை மகனிடம் “யாராவது, எப்பொழுதாவது இதுபற்றிக் கேட்டால் இது காக்காப்பொன் என்று மட்டும் சொல்; வேறு எதுவும் சொல்லாதே” என்று அறிவுரை வழங்கினான்.

ஒரு நாள் அதிகாலையில் தந்தை எழுந்து அவருடைய நண்பர் ஒருவருடன் வெளியில் சென்றார். வைக்கோற் துரும்பொன்று தந்தையின் தாடியில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட மகன் “அப்பா, அப்பா உமது தாடியில் ஒரு காக்காப் பொன்” என்று வியப்பில் கூவினான்.