பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


பது போலவும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று அவள் தன் கணவனுக்குக் கற்பித்தாள். வீட்டை அடைந்ததும் மாமனார் மருமகனிடம் அவ் இரு ஓவியங்களையும் காட்டி, அவை என்ன? என்று கேட்டான். மனைவி ஏற்கனவே கற்பித்த வண்ணம் விடை சொன்னான். மருமகனின் விடையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார் மாமனார். சற்று நேரத்துக்குப் பின் பதினெட்டு அறிஞர்களின் உருவங்கள் தீட்டப்பட்ட ஓவியத் திரையொன்றைக் காட்டி மருமகனிடம் அவ்வோவியம் பற்றிக் கேட்டார். மருமகனோ தன் மனைவி ஏற்கனவே கற்றுக் கொடுத்த முன்பு சொன்ன பதிலையே கிளிப்பிள்ளைபோல் சொன்னான்.

இதனைக் கேட்டு அங்குக் குழுமியிருந்தோர் நகைத்தனர். மாமனாரோ மருகமணிடம் “உனக்கு மாட்டினையும், குதிரையினையும் தெரிகிறது. ஆனால் மனிதர்களைத்தான் அடையாளம் காணத் தெரியவில்லை” என்றார்.

37. காலமுள்ளபோதே நற்பணி

வாள் கொண்டு இரு கூறாய் உடலை வெட்டி நெருப்பில் வீசப்படும் கொடிய நரகத் தண்டனையிலிருந்து ஒருவன் விடுபட, புத்தரைத் தெய்வமாகத் தொழுது, பெளத்த மடங்களுக்கு நன்கொடைகள் அளித்து, பெளத்த துறவிகளுக்குத் தருமம் தந்து அவர்களைப் போற்றி வருதல் வேண்டும் என்று போதித்து வந்தார் பெளத்த துறவி ஒருவர்.

விரைவிலேயே அந்த பெளத்த துறவியும்; அவரையும் அவருடைய போதனைகளையும் போற்றிக் காப்பாற்றி வந்த அவருடைய தலையாயத் தொண்டனும் மடிந்தனர். உலகில்